Bethlehemil pirantha yesu

பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே

நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே

நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்

En meetpar

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்

பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் செய்தி
நரர் வாழ்த்திட பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி

உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உந்தன் கிருபையின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே

ஆ அல்லேலூயா துதி பாடு
அன்று அமலன் பிறந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு

Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்

ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார்
அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நித்தம் நடத்துகிறார்

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்

எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார்
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் அவர்

புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும்
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே

Miguntha Aanantha Santhosam
En Karthar Yennodu Irupathal
Kuraiyillayea Kuraiyillayea
En Karthar Yen Meypar

1. Aathuma Thetrugirar
Pudubelan Tharuginar
Avar Namathinimitham Neethiyin Pathaiyil
Nithamum Nadathuginrar

2. Yethirigalin Kanmunnea
Virunthu Padaikinrar
Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
Nirambiyathu Yen Pathiram

3. Jeevanulla Natgallellam
Kirubai Yennai Thodarum
Nanmayum Thayavum Nallellam Thodarum
Uyirulla Naatkallellam – Avar

4. Pullulla Idangalilae
Ilaipaara Seiginrar
Amarntha Thaneergal Aruginil
Anuthinam Nadathuginrar

5. Irulsool Pallathakkil Nan
Nadakka Nernthalum
Thagappan Yennodu Irupathanal
Thadumatram Yenakillaye

Hand of God Yen Mela

Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்

எஸ்றா நான் நெகேமியா நான்
என் மேலே கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேலே கர்த்தர் கரம்

கொடுக்கும் கரம்(வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம்

மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்தகரம்
நிமிரக்கூடாத கூனியை அன்று
நிமிரச் செய்த நேசர் கரம்

ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெருகச் செய்த அற்புத கரம்
வாலிபனே எழுந்திரு என்று
பாடையைத் தொட்டு எழுப்பின கரம்

தலித்தாகூம் என்று சொல்லி
மரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்
வெட்டப்பட்ட காதை அன்று
ஒட்ட வைத்த கர்த்தர் கரம்

மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம்
வெட்டப்பட்ட காதை அன்று
ஒட்ட வைத்த கர்த்தர் கரம்

எலிசா மேல் அமர்ந்த கரம்
இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
இரத்தத்திற்கு முன் எலியாவை
ஓடவைத்த தெய்வ கரம்

Hand of god yen mela
Nan keapathu ellam petrukolven

Esra nan negemiya nan
Enmela karthar karam
esthar nan theporal nan
Enmela karthar karam

Kodukum karam nadathum karam
Kakum karam vilagatha karam

Manathurugi kustarogiyai
thottu sugam thantha karam
Nimirakoodaa kooniyay andru
Nimira seitha nesar karam

Aynthu apam kaiyil enthi
peruga seitha arputha karam
Valipaney elunthiru enduru
Paadaiyai thotu elipina karam

Thalithakum endru solli
Arithavala thoki niruthiya karam
Vetta patta kadhai andru
Ottavaitha karthar karam

Pavam peruguthe parum

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே

ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே

இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்

தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்

எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே

ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்

வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்

Ennai Nadathum Yesu

என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா

ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா

தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா

பாவமில்லா தூயவாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே

துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா

கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா

உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்

Thivya anbin sathathai

திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன்

திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன்

இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்

Uyirodu eluntha yesuve

உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர்-2

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே

மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே-2
உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது-2

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே
மரித்துப் போனீரே-2
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே

Puthu Vaazhvu Thandavarae

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்

Malaigal vilaginaalum

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..

கிருபை விலகாதைய்யா -4
(இயேசையா உம்)

கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர்(என்மேல்)
பாவங்களை மன்னித்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால்

நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன்
பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
எதுவும் என்னை அணுகுவதில்லை

எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
குற்றப்படும்படி செய்திடுவீர்

மனிதர்கள் விலகினாலும்
நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலைபெயராது
மலைகள் விலகினாலும்…